ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த வாலிபர் அவரது வீட்டிலேயே கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. சில காலமாக தாக்குதல்கள் குறைந்திருந்தன.
இந் நிலையில் மெல்போர்னில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த லக்விந்தர் சிங் (27) என்ற வாலிபர் அவரது வீட்டிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய அவர், விவசாய பண்ணையில் பணியாற்றி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது.
இது தொடர்பாக ஒரு நபரை மெல்போர்ன் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் வியட்நாம் அல்லது கம்போடியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனால் இது ஆஸ்திரேலியாவில் வழக்கமாக நடந்து வரும் இந்தியர்களுக்கு எதிரான இனரீதியிலாக நடந்த தாக்குதலா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்தக் கொலை நடந்தபோது லக்விந்தர் சிங்கின் மனைவி இந்தியாவில் இருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications