தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் வந்தது. இருப்பினும் இது புரளி என்று பின்னர் தெரிய வந்தது.
சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்துக்கும், வடபழனியில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கும் நேற்று இரவு திடீரென்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த அலுவலகங்களில் திடீரென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையும் நடத்தினார்கள்.
இதனால் நேற்று இரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதனால் இந்த திடீர் சோதனையும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்று காவல்துறையிடம் பத்திரிக்கையாளர்கள் விசாரித்தனர். அப்போது, உயர் அதிகாரிகள் கூறியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் கூறுகையில்,
டெல்லியில் உள்ள மத்திய தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு, மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததாக தகவல் வந்துள்ளது. அந்த கடிதத்தில் வருகிற 29-ந் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம், என்றும் தகவல் உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு போடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதையொட்டி கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அலுவலக வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புகாக நிறுத்தப்பட்டுள்ளனர். கோட்டையிலும் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு வடபழனியில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்குகையில், நான் இப்போது தான், டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளேன். மிரட்டல் கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இனிமேல்தான் அதுபற்றி விசாரிக்க வேண்டும்' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications