புனே-இன்போசிஸ் பெண் ஊழியர் மீது பிளேடு தாக்குதல்
புனே: புனேவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் பிளேடால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்குள்ளான பெண்ணின் பெயர் நிஹரிகா பிரசாத். 24 வயதான இவர் இன்போசிஸ் அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். சதாசிவ பேத் பகுதியில் உள்ள சுசிலா ஹாஸ்டலில் தங்கியுள்ளார். அவரை அமித் குமார் சர்மா என்ற 24 வயது என்ஜீனியர் காதலித்துள்ளார். ஆனால் இதை நிஹரிகா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அமித்குமார் திடீரென வேலையை இழந்துள்ளார். இதனால் பெரும் விரக்தி அடைந்தார். காதலும் தோல்வி அடைந்து, வேலையும் போனதால் கடும் ஆத்திரமடைந்த அவர் பிளேடு மூலம் நிஹரிகாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்தார் நிஹரிகா.
அதன் பின்னர் தனது மணிக்கட்டை பிளேடால் அறுத்துத் தற்கொலைக்கும் முயன்றார் அமித்குமார்.
இதையடுத்து இருவரையும் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், நிஹரிகாவும், அமித்குமாரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால் அமித்குமாருடன் காதல் உறவை வைத்துக் கொள்ள நிஹரிகாவகு்கு விருப்பமில்லை. இதனால் வருத்தமடைந்த அமித்குமார் இந்த செயலை செய்துள்ளார் என்றனர். இருவருமே பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications