சாய்பாபாவுக்கு சச்சின் டெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி

பிரசாந்தி நிலையத்திற்கு இன்று காலை வந்த சச்சின், அங்கு பொதுமக்களின் இறுதி தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள பாபாவின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வணங்கினார் சச்சின்.
சச்சின் மிகவும் தீவிரமான சாய்பாபா பக்தர் ஆவார். கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இந்தியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புட்டபர்த்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய லெவன் அணிக்கு சச்சின் தலைமை தாங்கினார். அன்று முதல் அவர் தீவிர சாய்பாபா பக்தரானார். அடிக்கடி புட்டபர்த்திக்கு வந்து சென்று பாபாவை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
சாய்பாபாவின் உடல் நலம் சரியில்லை என்பதால், தனது 38வது பிறந்த நாளைக் கூட நேற்று அவர் கொண்டாடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் கூட ஆடுவதில்லை என்ற முடிவில்தான் இருந்தார். இந்த நிலையில்தான் பாபாவின் மரணச் செய்தி வந்து சேர்ந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் அணியின் நலன் கருதி அவர் நேற்றைய போட்டியில் ஆடினார். இருப்பினும் அவரால் முழுமையாக மனதை ஈடுபடுத்தி ஆட முடியவில்லை என்பது அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
நேற்றைய போட்டியின் முடிவில் சச்சின் நேராக தனது ஹோட்டல் அறைக்குச் சென்று வெளியில் வராமல் உள்ளேயே சோகத்துடன் இருந்தார். நேற்று காலை சாப்பாடு கூட அவர் சாப்பிடவில்லையாம். மேலும் தன்னைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்று ஹோட்டல் மேலாளர் தெரிவித்தார். தனது அணி உறுப்பினர்களைக் கூட சச்சின் நேற்று போட்டிக்கு முன்பு வரை சந்திக்கவில்லை.
நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது சாய்பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சியர்கேர்ள்ஸ் எனப்படும் அழகிகளின் ஆட்டம் இடம் பெறவில்லை. மேலும், மைதானத்தில் இசை எதுவும் ஒலிக்கப்படவில்லை.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு சாய்பாபாவை கடைசியாக சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்பாபா பற்றிய மேலும் செய்திகள்
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications