சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 2 பேர் பலி, 6 பேர் உயிர் ஊசல்
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியை அடுத்த நதிக்குடியைச் சேர்ந்த கனகவேல் என்பவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. 100 அறைகள் உள்ள இந்த ஆலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசுகள் உராய்ந்ததில் தீப்பொறிகள் பறந்தன. இது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து அங்குள்ள பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்த 6 அறைகளுக்கும் தீப்பரவியது. இந்த விபத்தில் திருவேடபுரத்தைச் சேர்ந்த இருளாண்டி (37), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்(25), மற்றொரு சுரேஷ்(28), விஜயகுமார்(33), சிவனாண்டிபட்டியைச் சேர்ந்த சிவபெருமான்(28), திருவேடபுரத்தைச் சேர்ந்த பொன் இருளாண்டி(46), இன்னொரு சுரேஷ்(26) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications