ராசிபுரம் அருகே நோயாளி மரணம்: மருத்துவமனையை தாக்கிய உறவினர்கள்
ராசிபுரம்: வயிற்று வலி காரணமாக ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிர் இழந்ததால் ஆவேசம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் அருகே துத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுபாய். இவர் கடந்த சில தினங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாபுபாய் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் ஆவேசம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுக்கையிட்டு அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications