மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கொலை; டிரங்க் பெட்டியில் துண்டுதுண்டாக உடல்
மதுரை: மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு டிரங்க் பெட்டியில் வைத்து கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
மதுரை விராட்டிபத்து இருளாண்டித்தேவர் காலனியை சேர்ந்த லதா (23) மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குணசேகரன் என்பவருக்கும் 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்ற லதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசிலும் புகார் தரப்பட்டது.
இந்நிலையில் மதுரை- தேனி மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்ட் அருகேயுள்ள கால்வாயில் ஒரு டிரங்க் பெட்டி கிடந்தது. அதில் துர்நாற்றம் வீசியது.
தகவல் அறிந்த போலீசார் அந்தப் பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதில் சுடிதார் அணிந்த இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, பிணம் மடக்கி வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் காணாமல் போன லதாவின் உறவினர்களை போலீசார் அழைத்து சென்று காட்டியபோது அது லதாவின் உடல் தான் என்று தெரியவந்தது. பிணத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தப் படையினர் தேனி, திண்டுக்கல், சிவக்கை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications