ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடியல்ல, ரூ.1.90 லட்சம் கோடி-ஜோஷி் அறிக்கையில் த

ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தியது. இதன் தலைவராக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி செயல்பட்டு வந்தார்.
நிரா ராடியா உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்திய இந்தக் குழுவின் சார்பில் 270 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை ஜோஷி தயாரித்தார். ஆனால், அந்த அறிக்கைக்கு குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் ஒப்புதலைப் பெறாத நிலையில், அறிக்கையில் உள்ள விவரங்கள் ரகசியமாக வெளியாகி விட்டன.
அதில் பிரதமர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதையடுத்து காங்கிரஸ்-தி.மு.க. உறுப்பினர்கள் இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நேற்று பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தபோது காங்கிரஸ்-தி.மு.க. உறுப்பினர்கள் முரளி மனோகர் ஜோஷியிடம் இதுபற்றி கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவரை தலைவர் பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தினார்கள்.
இதனால் கோபம் அடைந்த முரளி மனோகர் ஜோஷி கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி விட்டு வெளியேறினார். உடனே காங்கிரஸ்- தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் 11 பேர் காங்கிரஸ் உறுப்பினர் சைபுதீன் ஜோசை பொதுக் கணக்கு தலைவராக தேர்ந்தெடுத்து தொடர்ந்து கூட்டத்தை நடத்தினர். அதில் ஜோஷி உருவாக்கிய பொதுக்கணக்கு குழு அறிக்கையை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த
அறிக்கையே செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் அந்த அறிக்கையின் விவரங்கள் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா தன்னிச்சையாக எடுத்த முடிவுகளால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.90 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறி இருந்தது. ஆனால் ஜோஷியின் அறிக்கையில், அதை விட கூடுதலாக ரூ.14,000 கோடி அதிக இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் மொத்தம் 3 வகையான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 122 லைசென்ஸ்கள் வழங்கியதில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடியும்,
சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்கியதில் ரூ.36,000 கோடியும்,
ஜி.எஸ்.எம். நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியதில் ரூ.30,000 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த இழப்பை சரி செய்ய 2008ம் ஆண்டிலிருந்து தரப்பட்ட அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்துவி்ட்டு, முறைகேடாக அதைப் பெற்ற நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதித்துவிட்டு, புதிதாக ஏலம் விட்டு லைசென்ஸ்களை விற்க வேண்டும் என்றும் ஜோஷி பரிந்துரைத்துள்ளார்.
இந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ரூ.22,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக செய்த கணக்கீடு முறையே சரியில்லை. தவறான கணக்கீட்டு முறையால்தான் இழப்பீடு அதிகமாக உள்ளது போலத்தெரிகிறது. உண்மையில் இழப்பே ஏற்படவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக் குழப்பங்களால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு தான் இழப்பு ஏற்பட்டது என்பதில் குழப்பமே மிஞ்சியுள்ளது.
பொது கணக்கு குழு அறிக்கை செல்லுமா?:
இந் நிலையில் தனது அறிக்கை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டேன். அதன் பிறகு அவர்களாக கூட்டம் நடத்தி எதையும் செய்ய முடியாது. அப்படி செய்வது செல்லுபடியாகாது என்றார்.
பாஜக தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், பொதுக் கணக்குக் குழு நடவடிக்கை என்பது நாடாளுமன்ற நடவடிக்கையின் அங்கமாகும். அது நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டது. விதிப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக இருக்க வேண்டும். அதன்படி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்தார். மற்ற உறுப்பினர்கள் அவருக்கு கட்டுப்பட்டவர்கள். உறுப்பினர்கள் சிலர் தங்களாக சிறுபிள்ளைதனமாக தீர்மானம் போட்டால் அது செல்லாது என்றார்.
அடுத்த கட்டமாக இந்த பிரச்சனை நாடாளுமன்றத்துக்கு வரும். அப்போது சபாநாயகர் மீரா குமார் எடுக்கும் முடிவை பொறுத்தே இந்த அறிக்கை செல்லுமா, செல்லாதா என்பது தெரியவரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications