தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் வெட்டி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளராக இருந்தவர் ஏ.சி. அருணா (50). இவர் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார், கான்டிராக்ட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தில் இன்று காலை 6.30 மணியளவில் வாக்கிங் சென்றார். அவருடன் முருகன் என்பவரும் சென்றார். சி.எஸ்.ஐ. மருத்துவமனை முன் சென்றபோது அவர்களை ஒரு கார் வழிமறித்தது.
அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், அருணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிவிட்டது. அருணாவுடன் வந்த முருகன் தப்பி ஓடியதால் அவரை கும்பல் விட்டுவிட்டது.
படுகாயமடைந்த அருணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக மாவட்ட துணைச் செயலாளர் அதிகாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடி நகரில் பதற்றம் நிலவுகிறது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக அருணாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கட்சிப் பணி மற்றும் கான்டிராக்ட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அருணாவை முன் விரோதத்தாலோ, தொழில் போட்டி காரணமாகவோ கூலிப்படை மூலம் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அருணாவின் குடும்பத்தினரிடமும், தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடமும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அருணாவுக்கு ராஜம் என்ற மனைவியும், லட்சுமிகாந்த் என்ற மகனும், செல்விபிரியா, சாந்தினி என்ற மகள்களும் உள்ளனர். மகன் லட்சுமிகாந்த் பி.இ. படித்து வருகிறார். மகள்கள் இருவரும் எம்.பில். படித்து வருகின்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications