குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
மெளன்ட் அபு: குடிபோதையில் ஓடும் ரயிலில் பெண்ணைக் கற்பழித்துள்ளார் ஒரு டிடிஆர்.
25 வயதான அந்தப் பெண் வெள்ளிக்கிழமை இரவு, ஆஜ்மீரிலிருந்து அபு சாலைக்கு ஆஜ்மீர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருந்தவர் டிடிமிஸ்ரா என்ற 52 வயது நபர்.
இவர் ஏசி பெட்டியில் தனியாக இருந்த அந்தப் பெண் பயணியை அணுகி, கற்பழித்துள்ளார். அப்போது டிடிஆர் குடிபோதையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,நான் மட்டும் அந்தப் பெட்டியில் தனியாக இருந்தேன். அந்தப் பெட்டியில் மற்ற பெர்த்கள் காலியாகவே இருந்தன. இதைப் பயன்படுத்தி உள்ளே வந்த மிஸ்ரா, குடிபோதையில் என்னைக் கற்பழித்து விட்டார்.
அப்பெண்ணின் கூச்சலைக் கேட்டு பக்கத்துப் பெட்டிகளில் இருந்த பயணிகள் விரைந்து வந்து டிடிஆரைப் பிடித்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அபு சாலை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் கற்பழிப்பு நடந்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே கூடுதல் எஸ்.பி. சுரேஷ் குமார் கூறுகையில், மிஸ்ராவை அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மிஸ்ரா, அந்தப் பெண்ணிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு கற்பழித்துள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications