கடையநல்லூர் அங்கன்வாடி பணியாளரை ஆசை காட்டி கற்பழித்த பாமக பிரமுகர்
கடையநல்லூர்: கடையநல்லுர் அங்கன்வாடி பணியாளரை ஆசை காட்டி கற்பழித்ததாக பாமக பிரமுகரும், தொலைக்காட்சி நிருபருமான பீர் முகமது என்பவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடையநல்லூர் பரசுராமபுரம் தெருவைச் சேர்ந்தவர் திவான். இவருக்கு ஹமீதா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. திவான் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். ஹமீதா பானு கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று புளியங்குடி டிஎஸ்பி ஜமீனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தல் நேரத்தில் கடையநல்லூர் நகராட்சி 31-வது வார்டு பாமக கவுன்சிலர் நூர்ஜகானின் கணவரும், பாமக மாவட்ட பிரமுகருமான பீர் முகமதுவோடு பழக்கம் ஏற்பட்டது. அவர் இதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் என்னிடம் பேசுவார். சில வாரத்திற்கு என்னை சந்தித்த அவர் உயர் அதிகாரிகளிடம் கூறி பதவி உயர்வு பெற்றுத் தருவதாக கூறினார். அவர் கூறியவற்றை நான் நம்பினேன். இதையடுத்து அவர் என்னுடைய பள்ளி கல்விச் சான்று, அங்கன்வாடி பணி நியமண ஆணை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், வங்கி ஏடிஎம் கார்டு போன்றவைகளை வாங்கிக் கொண்டார்.
திடீரென ஒருநாள் புளியங்குடியில் உள்ள காளியம்மாள் என்பவரது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நானும் அங்கு சென்றேன். அப்போது பதவி உயர்வு தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்திக்க கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று கூறி தனது காரில் கொடைக்கானல் அழைத்து சென்று ஒரு விடுதியில் தங்க வைத்தார். பின் என்னை அங்கு வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின் அந்த அதிகாரி தேக்கடியில் இருக்கிறார் என்று கூறி அங்கே அழைத்து சென்று விடுதியில் தங்க வைத்து பலாத்காரம் செய்தார். மேலும் என்னை செல்போனில் ஆபாசமாக படமும் எடுத்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி ஜமீன், பீர் முகமது மீது வழக்கு பதிவு செய்ய கடையநல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீர் முகமதுவுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் எம்எல்ஏக்கள் வரை நெருங்கிய தொடர்பு இருப்பதும், தமிழன், இமயம் ஆகிய இரு தொலைக்காட்சிகளில் நிருபராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications