ஒசாமா வசித்து வந்த வீட்டைச் சுற்றி ஜாகிங் போனேன்-முஷாரப்

இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகே பின்லேடன் வசித்து வந்தது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது பாகிஸ்தானுக்கும், அதன் ராணுவத்திற்கும் பெரும் தர்மசங்கடமான செய்தி.
நான் பின்லேடன் வசித்து வந்த வீடு உள்ள பகுதியில் முன்பு ஜாகிங் போயுள்ளேன். கிட்டத்தட்ட 9 மைல்கள் அளவுக்கு நான் ஜாகிங் போவேன். அந்த வீட்டைக் கடந்தும் கூட நான் ஜாகிங் போயிருக்கலாம்.
நான் பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பின்லேடன் குறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. இருப்பினும் உளவுத்துறையில் சில ஓட்டைகள் இருப்பதாக நான் உணர்கிறேன், அது உண்மைதான். பின்லேடன் எங்கே இருக்கிறான் என்பதை அவர்களால் சரியாக கணிக்க முடியாமல் போய் விட்டது துரதிர்ஷ்டமானது. அதேசமயம், இந்த கவனக்குறைவுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை மட்டும் காரணமல்ல, அமெரிக்காவும் கூட இதற்குக் காரணம்தான் என்றார் முஷாரப்.
பின்லேடன் வசித்து வந்த அபோதாபாத் ஒரு ராணுவ நகரமாகும். இங்கு ராணுவ அகாடமி உள்ளது. இளம் ராணுவ அதிகாரிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமிக்கு அருகில்தான் பின்லேடன் வசித்து வந்த வீடு உள்ளது.
இப்பகுதியில் ராணுவ வீரர்கள் நடமாட்டம் அதிகம். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு அதி உயர் பாதுகாப்புப் பகுதியில் பின்லேடன் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் படு பாதுகாப்பாக வசித்து வந்தது அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உயர் மட்ட அளவில் உறுதுணை கிடைக்காமல் இந்த இடத்தில் பின்லேடன் வசித்திருக்க முடியாது என்று அமெரிக்கா தொடர்ந்து சந்தேகப் பார்வை பார்த்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications