நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை

நாகர்கோவிலை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் லார்ட் ஜெகநாத் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. கல்லூரி நுழைவாயில் அருகே சிட்டி யூனியன் பாங்கின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கல்லூரி காவலாளிகளே ஏ.டி.எம். மையத்தையும் கண்காணித்து வந்தனர்.
நேற்றிரவு கல்லூரி காவல் பணியில் காவலாளிகள் சுடலைமுத்து, பால்பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு செய்தித் தாள்களை வாங்க மாணவர்கள் 2 பேர், காவலாளிகளின் அறைக்கு வந்தனர். அப்போது காவலாளி சுடலைமுத்து ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் கல்லைப் போட்டு முகம் சிதறடிக்கப்பட்டிருந்தது. அறை எங்கும் ரத்தம் சிதறிக் கிடந்தது. இன்னொரு காவலாளி பால்பாண்டி கல்லூரிக்கு அருகே பிணமாக கிடந்தார். அவரது தலையும் சிதைக்கப்பட்டிருந்தது.
ஏ.டி.எம். மையம் உடைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க வந்த கும்பலை காவலாளிகள் தடுத்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் பணம் தப்பிவிட்டது.
இது குறித்து எஸ்.பி. பவானீஸ்வரி கூறுகையில், இந்தக் கொலைகளில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளன. ஏ.டி.எம்மை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராவில் சிலரது உருவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.
கொலை சம்பவத்தை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications