இன்று அட்சய திருதியை... நகைகடைகளில் அலைமோதும் கூட்டம்

இதற்காக முன்பதிவெல்லாம் செய்து நகை வாங்க க்யூவில் நிற்கின்றனர் மக்கள்.
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலையில் ஏக உயர்வு காணப்பட்டது. கிராம் தங்கம் ரூ 2086 வரை விற்கப்பட்டது. அட்சய திருதியை நேரத்தில் இந்த விலை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த இரு தினங்களாக விலை ஓரளவு குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்த பலரும் இன்று நகைக் கடைகளை நோக்கி நடைபோட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதியை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பதும், ஆண்டு முழுவதும் நகை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதும் பெண்களிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று மாலை தொடங்கியது. வளர்பிறை நாளில் அட்சய திருதியை வந்துள்ளது. அதிலும் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் அட்சய திருதியை திதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் அட்சய திருதியை திதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் வேறு சேர்ந்து கொண்டது. எனவே, வழக்கத்தைவிட அதிக அளவில் நகை விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருதுகிறார்கள்.
போட்டி போட்டு சலுகைகள்
அட்சய திருதியை யொட்டி, பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் தங்கத்தின் மார்க்கெட் விலையில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என்றும், சில கடைகளில் ரூ.60 தள்ளுபடி என்றும், சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20 கிலோ தங்கம் விற்பனையானதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்வத்தில் பெண்கள்
அட்சய திருதியை திதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று மாலையே தங்கம் வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை கிடைக்காத பட்சத்தில் சிலர் தங்க காசு வாங்கிச்சென்றார்கள்.
அட்சய திருதியை திதிக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் திறக்கக்கூடிய கடைகள் அட்சய திருதியைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கே திறந்துவிட்டனர்.
ரூ.176 குறைவு
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.16664-ஆகவும், ஒரு கிராம் ரூ.2083-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 488-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2061-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை சற்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ16576க்கு விற்பனையாகிறது. கிராம் தங்கம் 2072 ஆக விற்கப்படுகிறது.
இந்த அட்சய திருதியைக்கு மட்டும் 1000 டன் தங்கம் விற்பனையாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 900 டன் தங்கம் விற்பனையானது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications