பின்லேடனுக்கு துரோகம் இழைத்து விட்டார் அல் ஜவாஹிரி-சவூதி நாளிதழ்

செப்ட்ம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அல் கொய்தா இயக்கம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தநிலையில் 2004ம் ஆண்டு பின்லேடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இயக்கத்தின் நடவடிக்கைகளை அல் ஜவாஹிரியே பார்த்து வந்தார். அப்போது அவர் அல் கொய்தாவை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டார்.
இதனால் அவருக்கும், பின்லேடனுக்கும் இடையே கடும் பனிப்போர் வெடித்தது. இந்த நிலையில், ஜவாஹிரி தலைமையில் எகிப்தியர்களைக் கொண்ட அல் கொய்தாவினர் தனித்து செயல்பட ஆரம்பித்தனர்.
மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் பத்திரமாக பதுங்கியிருந்த பின்லேடனுக்குத் தவறான தகவல்களைக் கூறி அங்கிருந்து அவரை வெளியேற வைத்து அபோத்தாபாத்தில் குடியேறச் செய்தது ஜவாஹிரியும் அவரது ஆட்களும்தான். இதனால்தான் பின்லேடனின் பாதுகாப்புக்கு பெரும் சீர்குலைவு ஏற்பட்டது.
மேலும் பின்லேடனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டார் எகிப்தைச் சேர்ந்தவரான சைப் அல் அப்தல். இவர் கடந்த ஆண்டுதான் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியிருந்தார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனின் மகன் மற்றும் குடும்பத்தினரை இவர்தான் ஈரானுக்கு அழைத்துச் சென்றார்.
பின்லேடனுக்கான தகவல் அளிப்பவராக செயல்பட்டு வந்த நபர் மூலம்தான் அமெரிக்கப் படையினர் பின்லேடனை நெருங்க முடிந்தது. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தன்னை அமெரிக்கர்கள் கண்காணித்து வருவது இவருக்குத் தெரியும். இருந்தும் வேண்டும் என்றே அதை கண்டு கொள்ளாதது போல நடந்து கொண்டு மறைமுகமாக, பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கர்களுக்கு உறுதிப்படுத்தி விட்டார் இவர் என்று அந்த செய்தி கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications