கணவர் மீதான கோபத்தால் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
சென்னை: தனது கணவர் தொடர்ந்து அடித்து உதைத்து சண்டை போட்டு வந்ததால் மனம் உடைந்த பெண், தனது இரு குழந்தைகளுடன் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
மதுரை ஆழ்வார்புரம், வைகை வட கரையைச் சேர்ந்த முனியாண்டி ஒரு துப்புறவுத் தொழிலாளர். இவருக்கு தாயம்மாள் என்ற 23 வயது மனைவியும், அவர்களுக்கு செல்லப்பாண்டி, நர்மதா என இரு குழந்தைகளும் உள்ளனர்.
முனியாண்டிக்கு தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து தினசரி அவருடன் சண்டை போட்டு அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தாயம்மாள் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து சென்று தாயம்மாளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது மதிச்சியம் போலீஸார், முனியாண்டியைப் பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications