காமவெறி பிடித்த கணவர்-குழந்தையுடன் போலீஸில் மனைவி புகார்
சென்னை : தனது கணவர் இணையதளம் மூலம் பல்வேறு பெண்களுடன் காமக் களியாட்டங்களில் ஈடுபடுகிறார். தன்னை ஒதுக்கி வைத்து விட்டு வேறு பெண்ணைக் கல்யாணம் செய்ய முயல்கிறார் என்று கோவையைச் சேர்ந்த பெண் சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்வடிவு என்ற அந்தப் பெண் கொடுத்துள்ள புகார் மனுவில்,
எனது சொந்த ஊர் கோவை. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த எனது கணவரை, கடந்த 2009-ம் ஆண்டு காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டேன். அவருடன் சேர்ந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையின் பலனாக எனக்கு குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்தபிறகு எனது கணவர் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பவர் என்று எனக்கு தெரிய வந்தது. இன்டர்நெட் மூலம் அவர் ஏராளமான பெண்களிடம் காதல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
என்னைக் கல்யாணம் செய்த பின்னர் மேலும் 3 பெண்களைக் கல்யாணம் செய்ய முயற்சித்தார். ஆனால் அதை நான் தடுத்து விட்டேன். எனது கணவருக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர்.
எனது தடுப்பு முயற்சிகளால் கோபமடைந்த எனது கணவர் என்னை சித்திரவதை செய்தார். வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் தற்போது ஹோம் ஒன்றில் தங்கியுள்ளேன்.
இதுகுறித்து மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்களும் எனது கணவரை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் 3 மாதத்தில் என்னோடு சேர்ந்து வாழ்வதாக கூறினார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
தற்போது மீண்டும் ஒரு திருமண முயற்சியில் அவர் இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து என்னுடன் வாழஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் செந்தில்வடிவு.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications