கடும் வெயிலில் தகதகக்கும் தமிழகம்-இன்றும் கொளுத்துகிறது வெயில்

தமிழகம் முழுவதும் கோடை காலம் உச்சகட்டத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளை வெயில் மக்கள் மண்டையைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, வேலூர், பாளையங்கோட்டை நகரங்களில்தான் அதிக அளவிலான வெயில் பதிவாகியுள்ளது. இந்த மூன்று நகரங்களிலுமே நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்கியது முதலே கடும் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில பகுதிகளில் கோடை மழையும் பெய்து அப்பகுதி மக்களை சற்றே ஆசுவாசப்படுத்தியுள்ளது.
நாகை, கடலூர், திருச்சி, மதுரை நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது.
சென்னையில் கடும் வெயில் பகலில் வாட்டி வருகிற போதில், இரவில் வெப்பம் குறையாமல் தூங்க முடியாமல் மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கடும் வெப்பக் காற்றை சந்திப்பதால் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
வருகிற 29ம் தேதி வரை இந்த கடும் வெயில் தொடரும் நிலை இருப்பதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications