மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம்: மாணவி சகுந்தலா
நெல்லை: மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்த பாளை மாணவி டி. வித்யா சகுந்தலா கூறினார்.
பாளை ஜெயந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வித்யா சகுந்தலா பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1186 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். பாடவாரியாக எடுத்துள்ள மதிப்பெண்கள் வருமாறு, தமிழ்-195, ஆங்கிலம்-193, இயற்பியல்-200, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-198. மாணவி வித்யா சகுந்தலாவின் தந்தை தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்வியியல் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் விஜயஜானகி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறை தலைவராக உள்ளார்.
தங்கை திவ்யா வெங்கடேஷ்வரி அதே பள்ளியில் 7-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு செல்கிறார். தேர்வில் சாதனை புரிந்தது குறித்து மாணவி வித்யாசகுந்தலா கூறியதாவது,
மாநில அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் தனிக்கவனத்துடன் பயிற்சியளித்தனர். வீட்டிலும் பெற்றோர் ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்தனர். எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.பி.எஸ். படித்து ஏழைகளுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.
சாதனை படைத்த மாணவியை ஜெயந்திர பள்ளி இயக்குனர் ஜெயந்திராமணி, முதல்வர் ஜெயந்தி ஜெயசந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications