ஐஎஸ்ஐ தலைவராகிறார் மன்சூர் அலிகான் பட்டோடியி்ன் சித்தப்பா மகன்

அபோத்தாபாத்தில் வைத்து பின்லேடனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் உள்ளூரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐக்கும் மிகப் பெரிய அவமானமாகப் போய் விட்டது. இதையடுத்து ஐஎஸ்ஐ தலைவர் சுஜத் பாஷா நீக்கப்படவுள்ளார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக இஸ்பாந்தியார் அலி பட்டோடி நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இவர் தற்போது ஐஎஸ்ஐ அமைப்பின் துணை இயக்குநரராக இருந்து வருகிறார்.
இஸ்பாந்தியார் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலி கான் பட்டோடியின் சித்தப்பா மகன் ஆவார். மன்சூர் அலிகானுக்கு தம்பி முறை வருகிறார்.
இஸ்பாந்தியாரின் தந்தை மேஜர் ஜெனரல் நவாப்ஸாதா முகம்மது அலி பட்டோடியும், மன்சூர் அலிகான் பட்டோடியின் தந்தை இப்திகார் அலி கானும் உடன் பிறந்த சகோதரர்கள். இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுடன் இருக்க முடிவு செய்தார் நவாப்ஸாதா. ஆனால் அண்ணன் இப்திகார் அலியோ இந்தியாவிலேயே இருக்க தீர்மானித்தார். இதனால் இரு குடும்பங்களும் பிரி்ந்தன.
சமீபத்தில்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் துணைத் தலைவராக இஸ்பாந்தியார் நியமிக்கப்பட்டார். இவரே ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக அதாவது இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைபப்புகளில் ஒன்றாக ஐஎஸ்ஐ திகழ்கிறது. இந்தியாவை சீர்குலைப்பது ஒன்றுதான் இதன் முக்கிய வேலையாக உள்ளது. இந்தியாவுக்கு இது மிகப் பெரிய அபாயகரமான அமைப்பாக இருந்தாலும், கூட மிகச் சிறந்த உளவாளிகள் வலையமைப்பைக் கொண்டு இயங்கி வருகிறது ஐஎஸ்ஐ. சதி செய்வதிலும், உளவு தகவல்களை அறிவதிலும் உண்மையிலேயே இவர்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். இதனால்தான் இந்தியாவில் தொடர்ந்து நாச வேலைகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்புக்கு இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு ராணுவ அதிகாரியை பாகிஸ்தான் நியமிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications