பிளஸ் டூ தேர்வில் நெல்லை, தூத்துக்குடி மாணவிகள் சாதனை
நெல்லை: பிளஸ்டூ தேர்வில் நெல்லை, தூத்துக்குடி மாணவிகள் மாநில அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் வீரவநல்லூர் புனித ஜான்ஸ் பள்ளி மாணவி சிவகாமி, சிவகங்கை எஸ்ஏ பட்டிணம் சகாயராணி பள்ளி மாணவி சங்கீதா, கோவை சர்கார்சாமகுளம் அரசு பள்ளி மாணவி சண்முகபிரியா ஆகியோர் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். நர்சிங் பாடத்தில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பள்ளி மாணவி யசோதை முதலிடம் பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம்: ஆங்கிலம்-148, தமிழ்-184, இயற்பியல்-144, வேதியியல்-117, உயிரியல்-136, நர்சிங்-196 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 925 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி சுப்பையா பள்ளி மாணவி அரும்புகோட்டையை சேர்ந்த நிவேதா தமிழ்-173, ஆங்கிலம்-174, இயற்பியல்-144, வேதியியல்-176, உயிரியல்-136, நர்சிங்-193 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 946 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தூத்துக்குடி சுப்பையா வித்யலாயா பள்ளி மாணவி சூர்யா சிறப்பு தமிழ்பாடத்தில் 188 மதிப்பெண்கள் பெற்று மாநில இடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, தமிழ்-179, ஆங்கிலம்-146, புவியியல்-173, வரலாறு-187, பொருளாதாரம்-168, சிறப்பு தமிழ்-188 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி சக்தி வினாயகர் இந்து வித்யாலயா பள்ளி மாணவி சினிபிரியாதர்ஷினி தமிழ்-191, ஆங்கிலம்-188, இயற்பியல்-200, வேதியியல்-199, உயிரியல்-200, கணிதம்-196 பெற்று மொத்தம் 1174 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வறுமையிலும் சாதித்த மாணவி:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள எஸ்.எச்.என். எஸ்.எல். ஹார்வி மேல்நிலைப் பள்ளி மாணவி மாலதி தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் எடுத்துள்ள மதிப்பெண் 1094. வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்த மாலதி, கடின உழைப்பால் இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது தந்தை சேகர் சைக்கிளில் தெருத் தெருவாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். உடல் நல குறைவால் தற்போது வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிறார்.
தாய் பரமேஸ்வரி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இரு சகோதரிகள் உள்ளனர். சாதனை குறித்து மாலதியிடம் கேட்டபோது,
வறுமையில் வாடுகிற குடும்பத்தில் பிறந்து இந்த சாதனையை புரிந்துள்ளேன். கல்வி கட்டணம் கூட கட்ட முடியாத பரிதாப நிலையில் படித்தேன். சாத்தூரில் உள்ள பெரியார்-காமராஜர் கல்வி அறக்கட்டளை அமைப்பு வழங்கிய நோட்டு, புத்தகம் மற்றும் நிதியுதவி, எனது தாவரவியல் ஆசிரியர் செய்த உதவிகளே இந்த சாதனைக்கு காரணம். கடினமாக படித்தால் மாநில ரேங்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது. அடுத்ததாக டாக்டருக்கு படிக்க ஆசை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications