புதுவையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் இந்து கடவுளான லட்சுமி படம் போட்ட நீச்சல் உடையில் ஒரு அழகி வந்தார்.
இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்டை கண்டித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்ரின் உருவ பொம்மையை எரித்தனர்.
தகவல் அறிந்த உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகளான முதலியார்பேட்டை மணி வீரப்பன், பெரியார் நகரைச் சேர்ந்த முருகானந்தம், சாம்பல்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications