அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம்
சென்னை: அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்நது அக்கட்சியினர் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேபோல தேமுதிக தலைமையகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையை எட்டி விட்ட தகவலைப் பார்த்ததும் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்து விட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் குதூகலித்தனர்.
வழக்கம் போல அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு ஆட அந்த இடமே கோலாகலமாகி விட்டது.
கட்சித் தலைவர்கள் யாரும் இன்னும் அதிமுக தலைமையகத்திற்கு வரவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருப்பதால் அவ்வை சண்முகம் சாலையில் நிற்க இடமில்லாத நிலை.
இதேபோல கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திலும் விழாக் கோலமாக உள்ளது.
நூற்றுக்கணக்கில் குவி்ந்துள்ள தேமுதிகவினர் பட்டாசுகளை வெடித்து அந்த இடத்தையே பரபரப்பாக்கி விட்டனர். கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக டபுள் டிஜிட்டில் இந்தக் கட்சி சீட் வாங்குவதால் தேமுதிகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு ஜெ நன்றி:
அதே போல அதிமுக முன்னிலை என்பதை அறிந்தவுடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீடு முன்பு பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். பட்டாசு வெடித்து ஜெயலலிதாவை வாழ்த்தி உற்சாக கோஷமிட்ட அவர்கள் இனிப்புகளையும் வழங்கினர்.
இந் நிலையில் பகல் 12.50 மணி அளவில் ஜெயலலிதா தன் வீட்டு மாடிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார். இரட்டை விரல்களைக் காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொண்டர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொண்டர்கள் அனைவரையும் வீட்டுக்குள் வர அனுமதிக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட, நுழைவு வாயில் திறக்கப்பட்டது. தொண்டர்கள் வீட்டுக்குள் சென்று வாழ்த்துக் கோஷம் எழுப்பி, ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications