வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடித்து ஆர்பிஎப் வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சரி பார்த்தபோது திடீரென அது வெடித்ததில் அருகில் இருந்த இன்னொரு வீரர் பலியானார்.
காரைக்குடியில் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக வந்திருந்த வீரர்கள் தங்களது துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைப்பதற்காக அவை சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரஞ்சித் குமார் என்பவர் துப்பாக்கியை சரி பார்த்தபோது அது திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்தது. அதிலிருந்து பாய்ந்த குண்டு அருகில் இருந்த சுக்பீர் சிங் என்ற வீரர் மீது பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications