ஆனைமலையைச் சுற்றி ஆற்றுமணல் திருட்டு: திணறும் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
ஆனைமலை: ஆனைமலையைச் சுற்றியுள்ள ஓடைகளில் மணல் திருட்டு தொடர் கதையாகிவிட்டது.
சிற்றோடைகள்
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணைப்பகுதியில் இருந்து தேங்காய்ப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றோடைகளில் மழைக்காலங்களில் மணல் வந்து ஒதுங்கி விடுகிறது. அந்த சிற்றோடைகளில் உள்ள மணலை சாக்கு பைகள் மூலமாக கடத்துகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த வருவாய் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்திருந்தனர். அவர்கள் என்னதான் கண்காணித்தாலும், அவர்கள் கண்ணில் மண்ணைத் மண்ணைத் தூவிவிட்டு மணலை கடத்துகின்றனர். அதிகாரிகள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் மணல் கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications