மதுரை-நாகர்கோவிலுக்கு 2012ல் மின்சார ரயில்: பணிகள் துரிதம்
நாகர்கோவில்: ரூ.176 கோடி செலவில் மதுரை-நாகர்கோவில் ரயில் பாதையை மி்ன்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012-ம் ஆண்டிற்குள் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ளது குமரிப மாவட்டம். கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு என சுற்றுலா தலங்களுக்கு குறைவில்லை. தற்போது கன்னியாகுமரியை இணைக்கும் ரயில் பாதைகளை மின்மயமாக்குகின்ற பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 87 கிமீ நீள கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பாதையை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இரணியில் இதற்காக துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நெல்லை-நாகர்கோவில் ரயில் பாதைகள் 262 கிமீ தூரத்திற்கு ரூ.176 கோடியில் மின்மயமாக்கப்பட உள்ளது. இதற்காக விருதுநகர்,கோவில்பட்டி, மணியாச்சி, நாங்குநேரி ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடம்பூர் வரை இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மணியாச்சி வரை வரும் ஜூ்ன் மாதத்திற்குள்ளும், தூத்துக்குடி பகுதி வரை செப்டம்பர் மாதத்திற்குள்ளும் மின்மயமாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மணியாச்சியி்ல் இருந்து நாகர்கோவில் வரையுள்ள மி்ன்பாதை மார்ச் 2012க்குள் மின்மயமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 300 மின்கம்பங்கள், 250 மெட்ரிக் டன் காப்பர் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் சென்னைக்கு ரயில் போக்குவரத்து துரிதமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications