தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் தனியாக வந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் காதலியை மிரட்டிக் கற்பழித்து பின்னர் கொலை செய்தது. இந்த செயலைத் தடுக்க முயன்ற காதலரையும் அந்தக் கும்பல் இரக்கமின்றி கொலை செய்து விட்டு ஓடி விட்டது.
இவர்களைக் கொலை செய்வதற்கு முன்பு மேலும் ஒரு காதல் ஜோடியையும் அக்கும்பல் தடுத்து காதலியை கற்பழித்து விட்டு இருவரையும் மிரட்டி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பயங்கர சம்பவத்தால் சுருளி அருவிக்குச் செல்வோர் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக காதல் ஜோடியினர், இளம் தம்பதியினர் தனியாக அருவிக்குப் போக அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன். 23 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலர்கள்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எழில் முதல்வன் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.
போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது எழில் முதல்வன், கஸ்தூரி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் தெரிய வந்ததாவது...
எழில் முதல்வனும், கஸ்தூரியும் காணாமல் போனதாக கூறப்படும் 14ம் தேதியன்று இருவரும் சுருளி அருவிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அக்கும்பல் எழில் முதல்வனை கொலை செய்து விட்டது.
பின்னர் கஸ்தூரியை கற்பழித்த அக்கும்பல் பின்னர் அவரையும் கொலை செய்துள்ளது.
எழில் முதல்வன், கஸ்தூரியோடு இன்னொரு ஜோடியும் அன்றைக்கு வந்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் மிரட்டி அப்பெண்ணையும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கொலை செய்யாமல் விட்டு விட்டு ஓடி விட்டனர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்தால் சுருளி அருவிக்கு சுற்றுலா வருவோர் குறிப்பாக இளம் ஜோடிகள், காதல் ஜோடிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். கொலை மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications