ஜெயலலிதாவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வாழ்த்து

இது குறித்து ருத்ரகுமாரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது
நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத் தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்சி அடைகின்றது.
ஈழத் தமிழர் தேசம், தமது தாயகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், கௌரவமான வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ளவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கோரவும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்ளை எதிர்த்து ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் போராடும் இன்றைய தருணத்தில் தங்களது வரலாற்று வெற்றி ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளது.
இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி முற்றாக மறுக்கப்பட்டு உள்ள ஒரு சூழலில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும், ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியல் பெருவிருப்பாகிய சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்கிக் கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.
ஒரு தேசத்துக்குரிய தகைமை கொண்ட ஈழத் தமிழினம் சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு முயற்சியிலிருந்து நிரந்தரப் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு தனியரசினை அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது.
உலகெங்கும் சிதறிப் பரவி வாழும் ஒரு மில்லியன் எண்ணிக்கை கொண்ட ஈழத் தமிழ் புலம் பெயர் மக்களும் உலகின் 80 மில்லியன் தமிழ் மக்களும் ஒருங்குகூடிச் செயற்படுவதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ வழிவகுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறோம்.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தனது இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழினம் நாளும் நடாத்தும் போராட்டத்தினை தாங்கள் நன்கறிவீர்கள்.
தமிழர் தாயகம் சிங்கள ஆக்கிரமிப்புப் பூமியாக மாற்றப்பட்டிருப்பதையும், அங்கு தமிழர் வாழ்வு பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படிருப்பதையும் பல முறை வெளிப்படுத்தியும் உள்ளீர்கள்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றி பெற்று தங்கள் கட்சியின் ஆதரவில் மத்தியில் அரசாங்கம் அமையும் சூழ்நிலை தோன்றினால் ஈழத்தமிழரின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்வுக்கு சுதந்திரத் தமிழீழம் அமைவது தான் ஒரேவழி என மத்திய அரசுடன் வாதாடி அதனை வென்றெடுப்பேன் எனத் துணிச்சலுடன் தாங்கள் தெரிவித்திருந்தீர்கள்.
தற்போது சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற பின்பு போர்க்குற்றவாளியான சிறிலங்கா ஜனாதிபதியினையும் அவர்தம் தரப்பையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவும், சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் இந்திய மத்திய அரசினை வலியுறுத்துவேன் என மிக உறுதிபடக் கூறியுள்ளீர்கள்.
வேறு பல அரசியல் தலைவர்கள் போல் சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் - கருத்தை துணிச்சலுடன் சொல்வது மட்டுமன்றி அதனை செயல்படுத்தும் ஆற்றலும் கொண்டவர் தாங்கள் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தாங்கள் முதல்வராவதை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்
இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழர்களை சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான வாய்ப்பை கடந்த காலங்களில் விட்டு வைத்ததில்லை. இனியும் விட்டு வைக்கப் போவதில்லை.
தமிழர்களின் அடையாளத்தை அழித்து, மெல்ல மெல்ல அவர்களை சிங்கள இனத்துடன் கரையப் பண்ணி இனக் கபளீகரம் செய்யும் முயற்சியினை சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது.
ஈழத் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தமிழரின் பாதுகாப்பான, கௌரவமான வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்ய முயன்றால், அதை சந்தர்ப்பம் பார்த்து சீர்குலைக்க சிங்கள அரசு தயராக உள்ளது.
இத்தகைய தருணத்தில் தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருப்பது தமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
தாங்கள் முதல்வராக இருந்த போது தான் ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது .
எனவே, வரும் காலங்களிலும் வரலாற்றில் இடம் வகையில் தாங்கள் செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.
தங்கள் தலைமையில் அமையும் தமிழக அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் வசந்தத்தைத் தரும் காலமாக அமையட்டும் என வாழ்த்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications