ஈரோடு அருகே பாமக நகரச் செயலர் வெட்டிக் கொலை
ஈரோடு: ஈரோடு அருகே பாமக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தூரம்பட்டி பாமக நகரச் செயலாளர் செல்வம். அவர் பழையபாளையத்தில் உள்ள தனது ஒர்க் ஷாப்பில் அமர்ந்திருந்த போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனங்களில் வந்தது.
அவர்கள் பாமக நகரச் செயலாளர் செல்வத்தை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். அதன் பிறகு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் செல்வத்தை சிகிசைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த கொலைக்கு தேர்தல் விரோதமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாமக நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications