மேலூர் அருகே பஸ் கவிழ்ந்து கண்டக்டர் பலி: 13 பேர் படுகாயம்
மதுரை: மதுரை மேலூர் அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மேலூர் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து (டி.என் 01 7327) மேலூர் தும்பைபட்டி அருகில் செல்லும் போது ஏர்லாக் ஆகி ஸ்டியரிங்க் செயல்படாமல் போனது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, தலை குப்புற கவிழ்ந்து ரோட்டின் மறுபுறத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த கண்டக்டர் வேணுகோபால் (45) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் நீதி (47), பயணிகள் விமலா, ரமேஷ், அப்துல், இசக்கிமுத்து, நடேசன் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications