+2வில் மோசமான ரிசல்ட்: பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் கல்வித் துறை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டம்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 49 பள்ளிகள் உள்ளன. இதில் 16 அரசு பள்ளிகளும், ஒரு ஆதிதிராவிட நலப்பள்ளியும், 6 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 3 நகராட்சி பள்ளிகளும், 2 சுயநிதி பள்ளிகளும், 21 மெட்ரிக் பள்ளிகளும் அடங்கும்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 86.8 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி, கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி விசிட் ஆகியவை காரணமாக கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் ஒரு சில பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.
மூன்று பள்ளிகள் சொதப்பல்
வால்பாறை மற்றும் கோட்டூர் பகுதியிலுள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 60-ஐக் கூடத் தொடவில்லை. வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 33.68 சதவீதம் சரிந்துள்ளது. கோட்டூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 41.81 சதவீதம் குறைந்துள்ளது. முடீஸ் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு 8.7 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த கல்வி மாவட்டத்தில் இந்த மூன்று பள்ளிகள் மட்டும்தான் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியினைப் பெற்றுள்ளன.
நோட்டீஸ்
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் 60 சதவீதத்திற்கு குறைவாக பெற்ற பள்ளிகளுக்கும், கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications