நாகர்கோயில் உரக்கிடங்கை மாற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள உரக்கிடங்கை மாற்ற அதிகாரிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உத்தரவிட்டார்.

நாகர்கோவில் வலம்புரிவிளையில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு செயல்பட்டு வருகின்றது. இதனை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் போராடி வந்தனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் இப் பகுதி மக்களிடம் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்த உரக்கிடங்கை மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்ததால் தான் வெற்றிபெற எளிதாக இருந்தது.

இப்போது அவர் வெற்றி பெற்று நாகர்கோவிலில் தொகுதி எம்.எல்.ஏ. ஆன உடன் உடனடியாக வலம்புரிவிளை உரக்கிடங்குக்கு சென்றார். இந்த உரக்கிடங்கை உடனே மாற்ற வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உரக்கிடங்கை மாற்றும் பணி துரிதப்படுத்தப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+