இனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு வைகோவிற்கு ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவெடுக்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் வைகோ என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணியால் மரியாதை இழந்தேன்-வைகோ:
முன்னதாக நேற்று முன்தினம் மதிமுகவின் 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. அதில் பேசிய வைகோ,
மதிமுகவைத் துவக்கி 18 ஆண்டுகளில் இடை த்தேர்தல், பொதுத் தேர்தல் என, பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். மதிமுக தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்தபோது, கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் லியுறுத்தினர்.
மதிமுக கூட்டணி வேண்டுமென அதிமுகவும் திமுகவும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன், மதிப்பை இழந்தேன், பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.
கூட்டணிக் கட்சியான மதிமுகவை அதிமுகவும் திமுகவும் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அந்தப் பழியிலிருந்து விடுபட்டுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications