புதுவை காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு வலைவீச்சு
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை (60). காங்கிரஸ் பிரமுகர்.
இவர் இரவு 10 மணியளவில் ஆம்பூர் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தம்பிதுரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் தம்பிதுரையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட தம்பிதுரை குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லஷ்மி நாராயணன், அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
காங்கிரஸ் பிரமுகர் தம்பிதுரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications