ஜிம்பாப்வேயின் மிஸ்டர் அவலட்சண ஆணழகனாக ஆஸ்டின் பேவே தேர்வு

Subscribe to Oneindia Tamil

Mr Ugly Austin Mbewe
ஹராரே: ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆஸ்டின் பேவே, அந்த நாட்டின் அவலட்சண ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடன் போட்டி போட்ட 8 'அழகர்களைத்' தோற்கடித்து மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை வென்றார்.

கடந்த சனிக்கிழமை வேடிக்கை வினோதம் நிறைந்த மிஸ்டர் அவலட்சண ஆணழகன் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள பெய்ட்பிரிட்ஜில் நடந்தது. இதில் முதலில் 15 பேர் கலந்து கொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் 6 பேர் பி்ன்வாங்கியதால் இறுதியில் 9 பேர் கலந்து கொண்டனர்.

அந்நாட்டின் கலைபண்பாட்டு கவுன்சில் மற்றும் சுற்றுலா துறையும் இணைந்து இந்த போட்டியை நடத்தின. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். நாட்டின் தொலைதூர நகரங்களான புலாவாயோ, ஹராரேவில் இருந்தும் கூட மக்கள் வந்திருந்தனர். இந்த போட்டியின் நடுவர்கள் அனைவரும் பெண்கள்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட 30 வயது இளைஞர் ஆஸ்டின் பேவே மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு சால்வையும், ரூ. 8 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

பெய்ட்பிரிட்ஜைச் சேர்ந்த குதக்வாஷே சிரம்பா(45) இரண்டாவது இடத்தையும், மாஸ்விங்கோவைச் சேர்ந்த சிடோவா செழிரா(39) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கும் சால்வையும் ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இது குறித்து பேவே கூறியதாவது,

இந்த வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே பலரும் என்னை பரிகசி்த்து வந்தனர். இந்த போட்டியில் வென்று என் அவலட்சணத்திலும் அழகு உள்ளது என்று உலகிற்கு காண்பித்துவிட்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+