தமிழகத்தில் 26 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: என்.சி.டி.இ. உத்தரவு
மதுரை: தமிழகத்தில் உள்ள 26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக இப்பள்ளிகளை மூட பள்ளி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்த கடிதங்களை, ஏற்கனவே ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
அதன்படி வரும் கல்வியாண்டில் 54 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என ஆசிரியர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
அந்த 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களோ, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களோ நிரப்பப்பட மாட்டாது.
26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் மட்டும் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வியாண்டில் மொத்தம் 80 பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications