டெல்லி: டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க வர முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார் உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வரும், அழகிகளுடன் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் கொட்டமடித்து அசிங்கப்பட்டு பதவி விலகியவருமான என்.டி.திவாரி.
என்னைக் கட்டாயப்படுத்தி ரத்தம் எடுக்க முடியாது. நான் வர மாட்டேன் என்று கூறி விட்டார் திவாரி.திவாரி மீது அவரது மகன் என்று கூறப்படும் டெல்லி இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்நதுள்ளார். இந்தப் பிரச்சினை பல காலமாக நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண திவாரிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 10ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திவாரி சோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் திவாரி வரவில்லை.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இதுபோல யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது. நானாக விரும்பினால் மட்டுமே ரத்த மாதிரி எடுக்க முடியும். கட்டாயப்படுத்தி ரத்தம் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகளின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்திருப்பதாக கோர்ட் இணைப் பதிவாளர் தீபக் கார்க் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜூலை 7ம் தேதி திவாரியின் மனு மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும்.
Veteran Congress leader N D Tiwari today refused to appear in a Delhi High Court dispensary to give his blood sample for DNA test to ascertain a youth's claim of being his biological son, saying that he cannot be forced to do so. Notwithstanding the high court's May 10 order directing him to give his blood sample today, he said in an application that "Nobody can be pressurised to give evidence in this manner". The counsel for the 85-year-old leader made the submission to the Joint Registrar Deepak Garg seeking exemption from personal appearance and also from giving his blood sample. The Joint Registrar has now referred the matter before the regular court on July 7 to decide Tiwari's plea for exemption.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.