செல்போனில் பேசினால் புற்றுநோய் வரும்-'ஹூ' எச்சரிக்கை

உலக சுகாதார மையத்தின் அங்கமாக உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்வில் நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் பரவும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்படுகிறது என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு
தினமும் அரைமணிநேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் பேர் உயிரிழப்பு
கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கதிர்வீச்சின் தாக்கம் குழந்தைகளையும் அதிகம் பாதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களை விட இந்தியாவில் இருப்பவர்களுக்கு செல்போன் கதிரியக்க பாதிப்பு அதிகம் தாக்குகிறது. இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழலும், உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைவே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புற்றுநோய் தவிர மறதி, தூக்கமின்மை, அஜீரணம் போன்றவையும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்
மலிவான செல்போன்களுக்குத் தடை
செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.
செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் செல்போனை தலைக்கு அருகில் கொண்டு செல்லாமல் ஹெட்போனை பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications