கிராமங்களுக்கு போங்கள்-விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
கோவை: வேளாண் விஞ்ஞானிகள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
நிறுவன நாள் விழா
கோவை வேளாண் பல்கலையின் 41வது நிறுவன நாள் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் “தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 எக்டர் நிலத்தில், 61 லட்சம் எக்டர் நிலத்தில் மட்டுமே பயிர் விளைகிறது.
28 லட்சத்து 63 ஆயிரம் எக்டர் நிலத்தில் மட்டுமே பாசன வசதி உள்ளது. நாம் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உணவு உற்பத்தியை பெருக்குவதே, முதல்வர் ஜெயலலிதாவின் கனவு.
மானியம்
விவசாயிகளை சென்றடைய வேண்டிய மானியங்கள் முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், மானியங்கள் சிந்தாமல், சிதறாமல் கொண்டு சேர்க்கப்படும். பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதற்கு, ஆள் பற்றாக்குறை காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழகத்தில் 492 பருத்தி மில்கள் இருந்தும், ஆந்திரா, குஜராத் போன்ற பிற மாநிலங்களில் இருந்து, பருத்தி வாங்க வேண்டிய நிலை உள்ளது. பருத்தி விளைச்சலை மேம்படுத்த விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமங்களுக்குச் செல்லுங்கள்
அனைத்து வேளாண் விஞ்ஞானிகளும், கிராமங்களுக்கு செல்ல வேண்டும். விவசாய உற்பத்திக்குத் தேவையான தகவல்கள், தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லி உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications