திருவாரூரில் நாளை நன்றியறிவிப்புக் கூட்டம்-கருணாநிதி பங்கேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, நாளை திருவாரூரில் நடைபெறும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
கடந்த 11 முறை வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி 12வது முறையாக, திருவாரூரில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அவர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாளை திருவாரூர் செல்கிறார்.
நாளை மாலை 6 மணிக்கு தெற்கு வீதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணித் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications