ராம்தேவின் போராட்டத்திற்கு மும்பை டப்பாவாலாக்கள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: ராம்தேவ் நடத்தும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மும்பையின் பிரபலமான டப்பாவாலாக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டப்பாவாலாக்கள் அறக்கட்டளையின் தலைவரான ரகுநாத் மேத்கே கூறுகையில், பாபா ராம்தேவுக்கு நாங்கள் எங்களது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின் உயரிய நோக்கத்தை 5000 டப்பாவாலாக்களும் புரிந்து வைத்துள்ளோம். அவருக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மும்பை ஆசாத் மைதானத்தில் ஊழலுக்கு எதிரான இந்தியத் தொ்ண்டர்களின் அமைப்பு சார்பில் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராம்தேவுக்கு ஆதரவாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications