டெல்லி நீதிமன்றத்தின் கோடை விடுமுறை ஆரம்பம்-1 மாதத்துக்கு பிறகே கனிமொழி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு?

இதனால் மேலும் ஒரு மாதம் கனிமொழி திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஓத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் டெல்லி நீதிமன்றத்துக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை இன்று தொடங்குவதால் நேற்றே தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவே இல்லை.
இந் நிலையில் இன்று முதல் விடுமுறையும் ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை 4ம் தேதி தான் நீதிமன்றம் மீண்டும் திறக்கும். இதனால் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அஜித் பரிஹோகே விரும்பினால், நீதிமன்றத்தின் கோடை காலம் முடியும் முன்பே கூட எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
அவர் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு வந்து தனது தீ்ர்ப்பை வழங்கலாம். அல்லது தனது தீர்ப்பை நீதிமன்றத்தின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கலாம், அதை பதிவாளர் நீதிபதியின் சார்பில் நீதிமன்றத்தில் வாசிக்கலாம்.
ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வர ஒரு மாத காலம் ஆகலாம் என்றும், அதுவரை அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications