கனிமொழி கைது விவகாரத்தில் கருணாநிதி சோகத்தை எங்களால் தீர்க்க முடியாது-ஆசாத்

மத்திய அரசால்தான் இன்று எனது மகள் கனிமொழி சிறையில் இருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் கூட்டத்தில் பேசும்போது கண்ணீர் வடித்தபடி கூறினார்.
இதுகுறித்து நேற்று குலாம் நபி ஆசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதியின் துயரத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம். ஒரு மகள் சிறையில் இருந்தால் அவரது தந்தையின் மனம் என்ன பாடுபடும் என்பதை நாங்கள் அறிவோம், நாங்கள் அதை உணர்கிறோம்.
கருணாநிதி மிகவும் மன வருத்தமடைந்துள்ளார். ஆனால் இதில் அரசுக்குத் தொடர்பில்லை, காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை. நாங்கள் எதையும் செய்யவும் முடியாது, தீர்வும் காண முடியாது. எங்களது எம்.பி கூட சிறையில் இருக்கிறார். எனவே எங்களால் இதில் எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது.
அதிமுக கூட்டணியை நிரகாரித்தோம்
சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக எங்களுடன் கூட்டணி சேருவதற்காக சிக்னல் கொடுத்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. அப்படிச் செய்தால் அது சந்தர்ப்பவாதம் என்பதால் நிராகரித்தோம்.
திமுக அரசு மீண்டும் வராது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, ஏ தோற்கப் போகிறது என்பதற்காக பி யுடன் சேருவது சரியல்ல என்பதால் நாங்கள் சேரவில்லை.
தெலுங்கானாவில் தாமதம்
ராம்தேவ் விவகாரத்தால் தற்போது தெலுங்கானா பிரச்சினையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ராம்தேவ் விவகாரம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இன்னேரம் தெலுங்கானா பிரச்சினை குறித்த பேச்சுக்கள் வேகம் பிடித்திருக்கும். ராம்தேவ் விவகாரம் முழுமையாக முடிந்த பின்னர் தெலுங்கானா விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications