ராம்தேவை போலீஸார் வெளியேற்றிய விவகாரம்-காங். தலைவர் அனில் சாஸ்திரி அதிருப்தி
டெல்லி: ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ராம்லீலா மைதானத்தில் சம்பவ தினத்தன்று நடந்தவை துரதிர்ஷ்டவசமானவை, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.
ராம்தேவ் விவகாரத்தில் முடிவெடுத்தது காங்கிரஸ் கட்சி அல்ல, மாறாக மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் முடிவெடுத்தது என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ராம்தேவ் விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்ள காங்கிரஸ் முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், ராம்தேவை பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களை விமான நிலையம் வரை அனுப்பி வரவேற்ற செயலையும் அனில் சாஸ்திரி கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திரா காந்தியோ அல்லது ராஜீவ் காந்தியோ இருந்திருந்தால், இப்படி ஒரு பாபாவை வரவேற்க விமான நிலையம் வரை யாரையும் அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மன்மோகன் சிங் அரசை சாடியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications