சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற சிறுவன் தாயைக் கொல்ல முயற்சி
கொல்லம்: நான்கு வயது சிறுமியைக் கொன்ற சிறுவன் தனது பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துள்ளான் என்னும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி மாலதி. இவர்களி்ன் 4 வயது மகள் ஸ்ரீஜா. எல்கேஜி படித்து வந்தாள். சசிகுமாரும், மாலதியும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள ஆனவிலாசம் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்கின்றனர்.
இருவரும் இங்குள்ள காலனியி்ல் தங்கியுள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் முத்தலாபுரத்தில் இருந்து ஸ்ரீஜாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். சசிகுமாரும், மாலதியும் வேலைக்கு செல்லும்போது ஸ்ரீஜாவை வீட்டில் விட்டு விட்டு செல்வார்கள்.
கடந்த 1-ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். அன்று மாலை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஏலக்காய் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் சடலத்தை பார்த்தனர்.
தகவல் அறிந்த குமுளி போலீசார் அங்கு வந்து சிறுமி உடலை கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.
இதையடுத்து பக்கத்து வீட்டு 13 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனை ரகசியமாக கண்காணிக்கும்படி சிறுவனின் பெற்றோரிடம் கூறினர். இதையறிந்த சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை கொல்வதற்காக சாப்பாட்டில் விஷம் கலந்தான். இதை பார்த்த தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் ஸ்ரீஜாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜாவை வாழைப்பழம் வாங்கி தருவதாக கூறி ஏலக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு பலாத்காரம் செய்து கொன்று விட்டு உடலை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிகரெட் லைட்டரால் முகத்தை எரித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளான். சிறுமியின் உடலை பார்த்த கூட்டத்தில் இவனும் இருந்துள்ளான். இதனால் போலீசாருக்கு முதலில் இவன் மீது சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர் விசாரணையில் சிறுவன் சிக்கியுள்ளான். அவனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications