சட்டசபையில் சத்தமாக ஒலித்த 'ரிங்டோன்'-'கொல்'லென்று எழுந்த சிரிப்பு!
சென்னை: செல்போனை அனைவரும் ஸ்விட்ச் ஆப்செய்து விட்டு வாருங்கள் என்று சபாநாயகர் ஜெயக்குமார் சொல்லி வாய் மூடுவதற்குள், ஒருவரது செல்போனிலிருந்து சரவணப் பொய்கையில் நீராடி என்று ரிங் டோன் அடிக்கவே, சபையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்தது.
சட்டசபையில் நேற்று சபாநாயகர் ஜெயக்குமார் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்,
சட்டமன்ற மாற்றுத் தலைவர்களாக பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.), தங்க தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.), செ.தாமோதரன் (அ.தி.மு.க.), வெங்கடேசன் (தே.மு.தி.க.), டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை அறிவிக்கிறேன்.
இப்போது உறுப்பினர்களிடம் இருந்து கேள்விகள் வந்து கொண்டிருப்பதால், அந்தந்த துறை செயலாளர்கள் உடனுக்குடன் பதில்களை தயாரித்து அளிக்கும்படி வலியுறுத்த அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன். பதில்கள் தயாராகி வரும் வரை சில நாட்கள் அவையில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவையில் அவ்வப்போது செல்போன் ஒலிக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருப்பதாக புகார்கள் வருவதால், அவைக்கு வரும் உறுப்பினர்களும், அலுவல் சார்பாக வருபவர்களும் செல்போன்களை ஆப்' செய்து கொண்டுவரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அவர் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் அவை வாசலிலிருந்த அவை ஊழியர் ஒருவரின் செல்போன் சரவணப் பொய்கையில் நீராடி என்று சத்தமாக ஒலிக்கவே நிசப்தமாக இருந்த அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications