வேலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை தாக்கிய 6 பேர் கைது
வேலூர்: வேலூர் காட்பாடி பாலாற்றில், மணல் கடத்தலை தடுத்த வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள பாலாற்றிலிருந்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் மணல் கடத்தி வருவதாக காட்பாடி தாசில்தார் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தாசில்தார் மனோகரன் தலைமையில் ஆர்.ஐ. பரசுராமன் வி.ஏ.ஓ. சாந்தகுமார், துணை தாசில்தார் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வாகனங்களை தணிக்கை செய்தனர்.
அப்போது, காட்பாடி பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, டிராக்டரை ஓட்டிவந்த சுப்பிரமணி (52) அவரது மகன்கள் சின்னதுரை, வெங்கடேசன் மற்றும் சிவா, கோட்டீஸ்வரன் ஆகிய, 11 பேர் வருவாய் துறை அதிகாரிகளை அடுத்து உதைத்தனர்.
இச் சம்பவத்தை அறிந்த அப் பகுதி மக்கள் , வருவாய் துறை அதிகாரிகளை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுக்கா அலுவலக ஊழியர்களும் குற்றவாளிகள் மீது நவடிக்கை எடுக்க கோரியும், அதிகாரிகளுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு, அதிகாரிகளை தாக்கிய சுப்பிரமணி உள்ளிட்ட ஆறு பேரை திருவலம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications