கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக மேலும் ஒரு குழுவை அமைத்தது அரசு
டெல்லி: கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மேலும் ஒரு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
கருப்புப் பணம் ஒழிப்பு தொடர்பாக மத்திய அரசு கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாக நீதித்துறை, பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் என சகல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். போதிய நடவடிக்கையை அரசு இதுவரை எடுக்கவில்லை என்று அன்னா ஹஸாரே, ராம்தேவ் உள்ளிட்டோரும் குற்றம் சாட்டி வருகினன்றனர்.
இந்த நிலையில் வரி ஏய்ப்பாளர்கள கண்டுபிடித்து அவர்களிடமிருந்து கருப்புப் பணத்தை பறிமுதல் செய்வது, வரிகளை முறையாக வசூலிப்பது உள்ளிட்டவை குறித்து அரசுக்கு யோசனை தெரிவிப்பதற்காக ஒரு குழுவை அரசு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த கமிட்டியை அமைத்துள்ளது. இந்தக் குழு அரசுக்கு தனது யோசனைகளைத் தெரிவிக்கும். மேலும் வரி ஏய்ப்பாளர்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் அவர்களின் விவரங்களை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த கமிட்டி அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கும்.
அன்னா ஹஸாரே நேற்று டெல்லி காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தபோது பல ஆயிரம் பேர் அங்கு திரண்டது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அன்னா எச்சரித்துள்ளார். இதனால் மத்திய அரசு சற்றே ஆடிப் போயுள்ளது. இந்த நிலையில் தற்போதைய குழுவை அது அறிவித்துள்ளது.
ஏற்கனவே இதேபோல ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications