ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்துமாறு சசிகலா சார்பில் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனையா தள்ளுபடி செய்தார்.
ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணை நடத்தக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால், அந்த உத்தரவு வரும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
உச்ச நீதிமன்றமும், கர்நாடக நீதிமன்றமும் இந்த வழக்கு விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கலாம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை அன்றைக்கே ஒத்திவைக்கலாம். ஒரு வாரம் ஒத்திவைப்பது அதிகம் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகலா மனுவை ஏற்று வழக்கு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications