இலவச பட்டா கேட்டு கிராமத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
களக்காடு: இலவச பட்டா வழங்கக் கோரி காட்டுப் பகுதியில் குடியேறிய மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரம் முத்துநகரைச் சேர்ந்தவர்கள் இலவச வீட்டு மனை கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதியான கூட்டுவடலி என்ற இடத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா தருமாறு வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர்.
ஆனால் அந்த இடம் சென்னை ஆயுர்வேத அறிவியல் முன்னேற்ற மையம் மற்றும் அறக்கட்டளையினருக்கு சொந்தமானது என்பதால் அதற்கு பட்டா கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பகல் முத்துநகர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடுமத்தினருடன் அந்த பகுதிக்கு சென்று குடிசைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட ஆயுர்வேத அறக்கட்டளை இயக்குனர் செல்வகுமார் தனது நிலத்தில் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்ததாக புகார் தெரிவித்தார்.
களக்காடு போலீசார் அங்கு சென்று குடிசை அமைக்க பொதுமக்கள் கொண்டு வந்த கம்புகள் மற்றம் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா தரும்வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications